ராமருக்கு மறக்காது வாக்களியுங்கள்... மீரட் பிரச்சாரத்தில் சீதையால் பக்தி பரவசம்

மீரட் பிரச்சாரக் களத்தில் அருண் கோவில்
மீரட் பிரச்சாரக் களத்தில் அருண் கோவில்

ராமருக்கு வாக்கு கேட்டு மீரட்டில் களமிறங்கிய சீதையால், தேர்தல் பிரச்சாரத்தில் அங்கே சுவாரசியம் கூடியுள்ளது.

மீரட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அருண் கோவில் போட்டியிடுகிறார். இவர் தூர்தர்ஷனில் வெளியான பிரபல ராமாயணம் தொடரில் ராமராக நடித்தவர். இந்த ராமருக்காக வாக்கு கோரி, சீதையாக உடன் நடித்த தீபிகா டோபிவாலா தற்போது அங்கே வலம் வருகிறார்.

ராமாயணம் தொடரில் அருண் கோவில்- தீபிகா
ராமாயணம் தொடரில் அருண் கோவில்- தீபிகா

பாஜகவின் முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் அயோத்தி கோயில் இடம்பெற்றிருந்தது. இம்முறை அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமையுடன், வடமாநிலங்களில் அயோத்தி ராமரின் பெயரால் வாக்கு கோரி வருகிறது. ராமரை முன்னிறுத்தி வாக்கு கோருவதன் வரிசையில் மீரட் தொகுதியில், தொலைக்காட்சி ராமருக்கு உரு கொடுத்த அருண் கோவிலை வேட்பாளராக்கி உள்ளது.

அருண் கோவில் வாக்கு கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் பயபக்தியுடன் கூடி தரிசனம் செய்கின்றனர். குழந்தைகளை அருண் கோவில் வசம் ஆசிர்வாதம் பெறச் செய்கின்றனர். அவரும் ராமாயணம் தொடரின் புகழ்மிக்க வசனங்களை பேசி வாக்காளர்களை மகிழ்விக்கிறார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது ’சீதை’ தீபிகாவும் இணைந்திருக்கிறார். இன்றைய தினம் மீரட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா, “உங்கள் ராமர் நாட்டிற்கு சேவை செய்ய வந்துள்ளார். அவருக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம். மறக்காது அருண் கோவிலுக்கு வாக்களியுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

அருண் கோவிலுக்கு வாக்கு கோரும் தீபிகா
அருண் கோவிலுக்கு வாக்கு கோரும் தீபிகா

ராமருக்கான வாக்குகள் மட்டுமன்றி அருண் கோவிலின் சொந்த ஊர் என்பதாலும் மீரட் தொகுதி வெற்றியை பாஜகவினர் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். முந்தைய 2014 மற்றும் 2019 தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி வேப்டாளரான முகமது ஷாகித் அக்லாக்கை, பாஜகவின் ராஜேந்திர அகர்வால் வென்றுள்ளார். எனவே ஏப்ரல் 26 அன்று இங்கே நடைபெறும் வாக்குப்பதிவில் முந்தைய வெற்றியை விஞ்சும் வகையில் வாக்குகள் குவியும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் காத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in