அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா... வயநாடு வாக்குப்பதிவுக்குப் பின் வெளியாகிறது அறிவிப்பு!

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா வத்ராவும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கேரளாவின் வயநாடு வாக்குப்பதிவிற்கு பின் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநிலமாக இருந்தது உபி. இதில் தற்போது அவர்களுக்கு மிஞ்சியிருப்பது ரேபரேலி தொகுதி மட்டுமே. இத்துடன் கைவசம் இருந்த அமேதியை கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி பறிகொடுத்தார். இவரை 2014 மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 2019ல் வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் 2004 முதல் எம்.பியாக உள்ளார். இதை எதிர்பார்த்த ராகுல் 2019 இல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். தற்போது வயநாடு எம்.பியான அவர் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். இச்சூழலில், அமேதியில் ராகுல் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

உ.பியில் சமாஜ்வாதியுடன் இணைந்து போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதி, ரேபரேலியும் இடம் பெற்றுள்ளன. அமேதியில் ராகுலின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா போட்டியிடுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அமேதியில் ராகுல் இருப்பார் என்ற தகவல் மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. இரண்டாம் கட்டத்தில் முடியும் வயநாடு தொகுதி தேர்தலுக்குப் பின் அவர் அமேதியிலும் போட்டியிடும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த தகவலை அமேதியில் பாஜகவிற்காக மூன்றாவது முறை போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் வெளியிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, "ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின் ராகுல் அமேதி வருவார். பொதுமக்களை பல்வேறு சமூகங்களின் பெயரில் பிரிப்பதுடன் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்வார். ராமர் கோயில் திறப்பிற்கான அழைப்பை அலட்சியம் செய்தவர்கள் மீது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, அமேதியில் ராகுலின் விருந்தினர் மாளிகை சுண்ணாம்பு அடித்து தயாராகி வருகிறது. இங்கு காங்கிரஸின் பல இளம் தலைவர்கள் விஜயம் செய்தி அமேதியின் இளைஞர்களை சந்தித்து பேசத் துவங்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

அமேதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரப் பொறுப்பை அக்கட்சியின் ராம்பூர் காஸ் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவான ஆராதனா மிஸ்ரா ஏற்றுள்ளார். கிராமசபை மற்றும் பிளாக்குகள் அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமேதி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும் அதன் மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட்டுள்ளன. அமேதியில் இதுவரை நடைபெற்ற 16 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13 முறை வெற்றி பெற்றது. இந்த 13 முறையும் காந்தி குடும்பத்தினர் 11 முறை போட்டியிட்டனர். மூன்று முறை மட்டும் காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டது.

பிரியங்கா
பிரியங்கா

இதேபோல், காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரான பிரியங்கா வத்ரா, அருகிலுள்ள ரேபரேலியில் போட்டியிடும் அறிவிப்பையும் காங்கிரஸ் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் காந்தி குடும்பத்தார் அனைவரும் உ.பியில் தங்கி தீவிரப் பிரச்சாரத்தில் இறங்க உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in