பிரதமர் மோடி உடன் பொது விவாதத்துக்கு ராகுல் காந்தி தயார்... ஆனால் மோடி வருவாரா?

ராகுல் - மோடி
ராகுல் - மோடி

ராகுல் காந்தி - நரேந்திர மோடி இடையே பகிரங்க பொதுவிவாதத்துக்கு, மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்ததற்கு ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்யத் தயாராக இருப்பதாக தன்னுடைய நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால் மோடி அத்தகைய விவாதத்தில் பங்கேற்க விரும்புவது குறித்து ராகுல் காந்தி சந்தேகமும் தெரிவித்தார்.

லக்னோவில் 'ராஷ்ட்ரிய சம்விதான் சம்மேளனம்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றுப் பேசினார். அப்போது, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவாதத்தில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி - நரேந்திர மோடி ஆகியோரை வலியுறுத்தி மூத்த பத்திரிகையாளர் மற்றும் 2 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியது குறித்து அவரிடம் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

இதற்கு உடனடியாக பதிலளித்த ராகுல் காந்தி "எந்த மேடையிலும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன்" என்று உறுதியளித்த ராகுல் காந்தி, ”ஆனால் எனக்கு அவரை தெரியும்; அவர் என்னுடன் 100 சதவீதம் விவாதம் செய்ய மாட்டார்" என்று பதிலளித்து இருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் ’இந்து' என்.ராம் ஆகியோர், இரு அரசியல் தலைவர்களையும் வணிகம் மற்றும் கட்சி சார்பற்ற மேடையில் பொது விவாதத்தில் பங்கேற்குமாறு நேற்றைய தினம் கேட்டுக் கொண்டனர்.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

’இரு தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை மட்டுமே வினவி வருகிறார்கள். ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் இதுவரை இல்லை. தவறான தகவல்கள் நிறைந்த இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தீர்க்கத்துடன் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு இதுபோன்ற விவாதம் அவசியம்’ என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

"இந்த நோக்கத்திற்காக, ஒரு பாரபட்சமற்ற மேடையில் ஒரு பொது விவாதத்தின் மூலம் எங்கள் அரசியல் தலைவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்பதன் மூலம் குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "இதுபோன்ற ஒரு பொது விவாதம், ஆரோக்கியமான மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் உண்மையான உருவத்தை முன்வைப்பதில் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவிவாதத்துக்கு ராகுல் ரெடி; மோடி ரெடியா?

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in