‘மோடி 10 ஆண்டுகளில் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கினார்... நாங்கள் கோடிக்கணக்கானோரை லட்சாதிபதி ஆக்குவோம்’ -ராகுல் உறுதி

அதானி - மோடி
அதானி - மோடி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான கோடீஸ்வர தொழிலதிபர்களை மீண்டும் சீண்டியுள்ளார்.

பாஜக - காங்கிரஸ் இடையிலான தேர்தல் பிரச்சார கள மோதல், யாருக்கான ஆட்சியை அவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் கோடீஸ்வர தொழிலதிபர்கள் நலம் நாடும் சலுகைகள், திட்டங்கள், அரசு கொள்கைகளை வகுத்துத் தந்ததாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் கண்டுகொள்ளப்படாதும், அவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதே வேளையில் தனியார்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்ததாகவும், பொருளாதாரம் வளந்ததாகவும் பெருமிதம் கொண்டார்கள்.

இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்கள்: முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்கள்: முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

ஆனால், காங்கிரஸ் தரப்பில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், குறிப்பாக ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியே இது தொடர்பாக, மக்களவை முதல் மக்களுக்கான பொதுக்கூட்டங்கள் வரை உடைத்துப் பேசி வருகிறார். பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக அனுகூலமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

இதுவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தனது பிரச்சாரத்தை திசை திருப்ப உதவியது. அதிக சொத்து வைத்திருப்போரிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்காக காங்கிரஸ் மறு பங்கீடு செய்து விடும் என்றது. இதில் பிரதமர் மோடி, பெரும்பான்மை மக்களிடமிருந்து சொத்துக்களை பறித்து, சிறுபான்மையினருக்கு அவற்றை காங்கிரஸ் பகிர்ந்தளித்துவிடும் என பிரச்சாரம் செய்தார். பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள் என காங்கிரஸை சாடினார்.

சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, பொதுமக்களின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கும் பல வாக்குறுதிகளையும் தங்கள் பிரச்சாரக் களத்தில் சேர்த்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சியில் வளர்ந்தவர்களை விட அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கும் என்றும் ராகுல் காந்தி போன்றவர்கள் வாக்குறுதியாக வழங்க ஆரம்பித்துள்ளனர். இதையே இன்றைய தினம் ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டு உறுதியளித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜார்கண்டின் சாய்பாசாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”மோடி தனது 10 ஆட்சிக் காலத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் என 23 கோடீஸ்வரர்களை மட்டுமே வளர்த்தெடுத்தார். ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதி ஆக்குவோம்” என்று உறுதி அளித்தார்.

கூடவே பாஜகவின் தொழிலதிபர் பாசத்தையும், ஜார்க்கண்டின் பெரும்பான்மையினரான பழங்குடி மக்கள் நலனையும் முடிச்சிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ’பழங்குடியினருக்கு சொந்தமான 'ஜல், ஜங்கிள், ஜமீன்' ( நீர், வனம், அதிகாரம்) ஆகியவற்றை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புவதாக’ ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு மாறாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது வழங்க காத்திருக்கும் நலத்திட்டங்களையும் வாக்குறுதிகளாக இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பட்டியலிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in