கன்னோஜில் அகிலேஷ் யாதவுக்கு வாக்கு சேகரித்த ராகுல் காந்தி

கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷை ஆதரித்து ராகுல் பிரச்சாரம்
கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷை ஆதரித்து ராகுல் பிரச்சாரம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்கு மேல் உயரும் வரை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு ஆண்டும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும். நூறு நாள் வேலைத்திட்ட ஊதியம் அதிகரிக்கப்படும். பல்வேறு பிரிவுகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது உறுதி செய்யப்படும்.

பாஜக அடுத்த சில நாட்களில் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யக்கூடும். எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியா (இந்தியா கூட்டணி) புயலாக மாறி வருகிறது. உத்தரப்பிரதேசம் வழி காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான தேர்தல் இது” என்றார்.

பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்  (வலது)
பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் (வலது)

அதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், தனது தந்தை மறைந்த முலாயம் சிங் யாதவ், அரசியலில் அறிமுகமானபோது தன்னை கன்னோஜுக்கு அழைத்து வந்து மக்களிடம் ஒப்படைத்ததை நினைவு கூர்ந்தார்.

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் பேசுகையில், "மூத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றுவது பற்றி பேசியுள்ளனர். ஆம் ஆத்மியின் உயர்மட்ட தலைவர்கள் பெரும்பாலானோர் சிறையில் உள்ளனர். ஆனால் இது பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்கான எங்களின் மன உறுதியை குறைக்கவில்லை" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in