யமஹா பைக்கில் வந்து வாக்களித்த ரங்கசாமி... முதல் நபராக வந்து ஜனநாயக கடமையாற்றிய குன்றக்குடி அடிகளார்!

யமஹா பைக்கில் வாக்களிக்க வரும் ரங்கசாமி
யமஹா பைக்கில் வாக்களிக்க வரும் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி,  குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர். 

வாக்களிக்கும் ரங்கசாமி
வாக்களிக்கும் ரங்கசாமி

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அரசியல் பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள்  காலையில் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

பொன்னம்பல அடிகளார் வாக்களித்தபின்னர்
பொன்னம்பல அடிகளார் வாக்களித்தபின்னர்

அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமியும் வாக்களித்தார். இன்று காலையில் பழைய இருசக்கர வாகனமான யமஹா ஆர்.எக்ஸ் 100-ல் புறப்பட்டு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார். பொதுவாக எப்போதும் அவர் புதுச்சேரிக்குள் தனது புல்லட்டில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருப்பார். அண்மைக்காலமாக புல்லட்டை எடுப்பதில்லை. காரில் தான் சென்று வருகிறார். இந்த நிலையில், வாக்களிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அவர் வந்தது அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

எந்தத் தேர்தலிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மடாதிபதிகள்  பலரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது இல்லை. ஆனாலும் குன்றக்குடி மடத்தில் மடாதிபதியாக உள்ளவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தும் ஜனநாயக கடமையை சரியாக செய்து வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது மடாதிபதியாக உள்ள குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று முதல் நபராக தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயக கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.

படங்கள்: எம்.சாம்ராஜ், குன்றக்குடி சிங்காரவடிவேல்

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in