ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது... பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!

மதுரை நகரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரம்
மதுரை நகரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரம்

ஊழலுக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஜகவில் இணைந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகள் காணாமல் போய்விட்டன என்று தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நகரில் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வார்டு 50-ல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், தமிழ்ச்சங்கம் ரோடு,தைக்கால், ஆஞ்சநேயர் ஆலயம் பகுதி,பள்ளிவாசல் சந்து ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள 534 தொதிகளுக்கு மூன்று மாதம் தேர்தல் நடத்தினால், அப்படியென்றால் மொத்த நாட்டுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்த உங்களுக்கு 2 வருடமாகி விடும் என்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விமர்சனம் செய்தார்.

மேலும் அவர் பேசுகையில், “ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஜகவில் இணைந்த 25 எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகளும் காணாமல் போய்விட்டன; பணமும், அதிகாரமும்தான் முக்கியம் என பாஜக உள்ளது. இந்த முறை பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் வலுவாக களமிறங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

பகுத்தறிவு கொண்ட ஒரு மாநிலத்தில், அனைவரும் கல்வியறிவு பெற்ற ஒரு மாநிலத்தில் கச்சத்தீவு பற்றி பச்சைப் பொய்யைப் பரப்பும் பாஜகவின் டுபாக்கூர் வேலைகள் நீடிக்காது. அரசு கொடுப்பதைக் படிக்கக்கூடாத திறனில்லாத ஒரு ஆளுநரை பொறுப்பில் அமர்த்தி, அரசு நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது ஒன்றிய பாஜக அரசு.

எனவே யாருக்கெல்லாம் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளதோ, யாருக்கெல்லாம் உங்களின் குழந்தைகளின் மேல், அவர்களின் எதிர்காலத்தின் மேல் பற்றுள்ளதோ அவர்கள் அனைவரும் மதுரை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசனுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in