எஸ்பிஐ வங்கியின் வாதம் கேவலமானது... அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டம்!

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் வாதம் மிகவும் கேவலமானது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ, வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தகவல்களை அளிக்க 4 மாத கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி

அப்போது பேசிய அவர், ”நானும் 20 ஆண்டுகளுக்கு மேலாக வங்கியில் பணியாற்றி இருக்கிறேன். ஒரு வங்கி நடத்துவதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் அனுமதி பெற சில அடிப்படை தொழில்நுட்ப தகுதிகள் உள்ளது. இந்தியா உலகத்திலேயே ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம். இவ்வளவு பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டில் உள்ள மிகப்பெரிய வங்கி ஒன்றின் மிகக் குறைவான ஒரு தகவலை வழங்க முடியவில்லை என்றால் என் உடல் நடுங்குகிறது. வங்கி கட்டமைப்பே செயலிழந்து விட்டதோ என அச்சமாக உள்ளது. இது மிகவும் கேவலமானது ”என்றார்.

பிரதமர் மோடியுடன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

மேலும், ”10 ஆண்டுகளாக டெல்லியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. எத்தனை முறை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருக்கிறார்? மக்கள் நலன் மீது அக்கறை உண்மையாகவே இருந்தால், சென்னை புயல், மழை பாதிப்பு மற்றும் தென் தமிழக அதி கனமழை பாதிப்புகளின் போது வந்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பிரதமர் அரசாங்க ரீதியாகவும் தமிழகத்திற்கு சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு வைக்கும் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பாராட்டுவோம்” என்றார்.

இதனிடையே மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனியாக 10 நிமிடம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து கேட்ட போது, “பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வரும் போது, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சில புரோட்டோகால்கள் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை வரும் பிரதமரை வரவேற்று, வழியனுப்பி வைக்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது. அதை முதலமைச்சரின் அரசாங்க உத்தரவின் பேரிலேயே அந்த பணியை சரிவர செய்திருக்கிறேன். தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பிரதமரை சந்திக்கவில்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in