முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த கட்டிடம்... 5 மாதத்தில் இடியும் அபாயம்... மக்கள் அதிர்ச்சி!

இடிந்து விழும் நிலையில் நகர்புற நலவாழ்வு மைய தூண்
இடிந்து விழும் நிலையில் நகர்புற நலவாழ்வு மைய தூண்

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் 5 மாதம் கூட நிறைவடையாத நிலையில் சேதம் அடைந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி 52 வது வார்டு பீளமேடு கல்லூரி நகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் நகர்ப்புற நல வாழ்வு மையம் புதிதாக திறக்கப்பட்டது. இந்த மையம் ஒரு நாளில் காலை மாலை இரு முறை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட இந்த மையத்தின் முன்புற தூணில் பெரியளவு விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மையத்தில் சுற்றுப்புற சுவரும் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் புதர் மண்டிக் கிடக்கிறது.

இடிந்து விழும் நிலையில் நகர்புற நலவாழ்வு மைய தூண்
இடிந்து விழும் நிலையில் நகர்புற நலவாழ்வு மைய தூண்

இதற்கு முன்பே அந்த தூணில் விரிசல் ஏற்பட்டு தற்காலிகமாக பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வரும் நிலையில் தற்போது மீண்டும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரமின்றி கிடக்கும் மருத்துவ மைய வளாகம்
சுகாதாரமின்றி கிடக்கும் மருத்துவ மைய வளாகம்

எனவே, இடியும் நிலையில் உள்ள தூணையும் சுற்றுபுற சுவரையும் தரமான முறையில் கட்டி தர வேண்டும் எனவும் அவ்வப்போது இம்மையத்தின் வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் திறந்து வைத்த நிகழ்ச்சியின் கல்வெட்டு
முதலமைச்சர் திறந்து வைத்த நிகழ்ச்சியின் கல்வெட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in