தலைவர் ஜோசப் விஜய்; பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்... வெளியானது தவெகவின் நிர்வாகிகள் பட்டியல்!

விஜய்
விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பு இன்றைய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிரடியாக அறிவித்தார். தற்போது அவர் தனது தவெக கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த விவரங்களை இன்றைய தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

தவெக
தவெக

அந்த அறிவிப்பில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்கிற முனுசாமி, பொருளாளர் வெங்கட்ராமணன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலாளர் தாஹிரா உள்ளிட்டோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சபனை இருக்கும் பட்சத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம்’ என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது அந்த கட்சியின் பெயரை பொது அறிவிப்பாக வெளியிட்டு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிடும். இந்த அறிவிப்புக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால் விண்ணப்பித்தவர்களுக்கு கட்சியின் பெயர் ஒதுக்கப்பட்டு கட்சியும் பதிவு செய்யப்படும்.

தவெக
தவெக

ஒருவேளை இதற்கு யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் கட்சி பதிவு செய்யப்படாது, தொடர்ந்து சம்பந்தபட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த அடிப்படையில் தான் தற்போது விஜயின் கட்சியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் விவரங்கள் பற்றி பொது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இப்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in