தொடங்கியது சீனியர் சிட்டிசன்களுக்காக தபால் வாக்குப்பதிவு... ஆர்வத்துடன் வாக்களிக்கும் மூத்த குடிமக்கள்!

சீனியர் சிட்டிசன்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்
சீனியர் சிட்டிசன்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்

85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மற்றும் நேரில் சென்று வாக்கு அளிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பெறும் பணி துவங்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்று முதல் அவர்களிடம் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறும் பணி துவங்கியுள்ளது.

முத்த வாக்காளர்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்
முத்த வாக்காளர்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்

ஈரோடு மக்களவை தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 21,805 பேர். மாற்றுத்திறனாளிகள் 9,824 பேர். இவர்கள் அனைவரும் தபால் வாக்களிக்க வசதியாக கடந்த மூன்று நாட்களாக படிவம் 12டி வழங்கும் பணி நடைபெற்றது.

முத்த வாக்காளர்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்
முத்த வாக்காளர்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு அளிக்கும் பணி துவக்கம்

இதில் 2,201 முதியவர்களும் 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த சம்மதம் தெரிவித்து உள்ளனர். மற்றவர்கள் தாங்களாகவே வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதாக தெரிவித்து உள்ளனர். விருப்பம் தெரிவித்த 3,001 பேரின் தபால் வாக்குகளை நேரில் பெறும் பணியை இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இன்று மாலை 6 மணி வரை இவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்படும். ஏப்ரல் 7-ம் தேதி வரை இந்த வாக்குகள் பெறப்பட உள்ளது. விடுபட்டவர்கள் வாக்களிக்க 8-ம் தேதியும் கூடுதலாக ஒருநாள் அவகாசம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைப் போலவே தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் சீனியர் சிட்டிசன்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in