மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக?! குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு!

குஜராத்
குஜராத்

மக்களவைக்காக இன்று நடைபெறும் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவில் குஜராத்தின் 25 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2019 தேர்தலைப் போல இம்மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக மீண்டும் வெல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

பாஜக ஆளும் குஜராத்தில் மொத்தம் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் ஒன்றான சூரத்தில் பாஜக வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வாகி விட்டார். இதனால், குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள எம்பிக்களில் மத்திய ஜவுளித்துறையின் இணை அமைச்சர் தர்ஸனா ஜர்தோஷ், ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் மஹேந்திரா முஞ்சப்பாரா என பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

இவர்களுடன் மத்திய சுகாதர நலத்துறை அமைச்சரான மன்சுக் எல்.மாண்டவியா மற்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் புருஷோத்தம் கோடாபாய் ருபாலா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்தர் பட்டேலின் சொந்த இடமாக இருப்பது காந்திநகர் தொகுதி. இங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடுகிறார்.

சூரத், வதோதரா, போர்பந்தர், வல்சாத், ராஜ்கோட், பஞ்ச்மஹால், மெஹஸானா, பனஸ்கந்தா, அகமதாபாத் மேற்கு, பாவ்நகர், அம்ரேலி, சுரேந்தர்நகர் ஆகிவற்றின் எம்பிக்களுக்கு இந்தமுறை மறுபோட்டிக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த மாற்றத்தால், பாஜகவிற்கு உள்கட்சி எதிர்ப்பும் கிளம்பியது. இதனால், வதோதராவில் இரண்டுமுறை எம்பியான ரஞ்சன் பட் வேட்பாளரை மாற்றியது. இவரது இடத்தில் பாஜக உள்ளூர் தலைவரான ஹேமங் ஜோஷி என்பவருக்கு வாய்ப்பளித்தது.

மோடி
மோடி

குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் துவக்கத்தில் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைச்சர் ருபாலா கூறிய கருத்து சர்ச்சையானது. இதன் காரணமாக ராஜ்புத் சமூகம் எதிர்ப்பை தெரிவித்தது. இத்துடன், வழக்கமாக நிலவும் மாநில ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பும் குஜராத்தில் உள்ளது. இவை அனைத்தையும் சமாளிக்கும் வகையில் பிரச்சாரத்தை முடித்துள்ளது பாஜக. எனினும், இதன் முடிவுகள் குஜராத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கூர்ந்து நோக்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி...

தீயாய் பரவும் வீடியோ!சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in