காசேதான் கடவுளடா; அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா... பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

பிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ்
பிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, ”காசேதான் கடவுளடா... அது கடவுளுக்கே தெரியுமடா” என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் மருத்துவர் ராமதாஸ்
வாக்களித்த பின்னர் மருத்துவர் ராமதாஸ்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்கு, புதுச்சேரிக்கு மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வருவார், என்ற பெரும் நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு, “அது கடவுளுக்கு தான் தெரியும். காசேதான் கடவுளடா. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா. எனக்கு வந்த தகவல்படி நியாயமாகவே தேர்தல் நடைபெறுகிறது. மாலை வரை காத்திருப்போம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in