கங்கையில் சிறப்பு வழிபாடு... வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் 3வது முறையாக வேட்புமனு தாக்கல்
பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் 3வது முறையாக வேட்புமனு தாக்கல்

வாராணசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5வது கட்டத் தேர்தல் வருகிற மே 20ம் தேதி நாடு முழுவதும் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 6ம் கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 7ம் கட்டமாக 57 தொகுதிகளில் ஜூன் 1ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தலில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாராணசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் கடந்த இரண்டு முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாராணசி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடி
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமரின் வேட்புமனுவை முன்மொழிந்த பண்டிட் ஞானேஸ்வரர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக வாராணசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in