‘பாகிஸ்தான் அணுகுண்டு தரமற்றது; விற்றால் அதை வாங்கக்கூட ஆளில்லை’ பிரச்சார மேடையில் வெடிக்கும் மோடி

பாகிஸ்தான் வசமிருக்கும் அணு ஆயுதங்கள்
பாகிஸ்தான் வசமிருக்கும் அணு ஆயுதங்கள்

பாகிஸ்தானின் அணுகுண்டை முன்வைத்து, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் என தனது இரு எதிரிகளையும் ஒரு சேர தாக்கியுள்ளார் பிரதமர் மோடி.

பாகிஸ்தான் வசம் அணுகுண்டு இருப்பதாக இந்தியர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி கடும் அச்சத்தை விளைவிப்பதாக சாடும் மோடி, பாகிஸ்தானின் அணுகுண்டு தரமற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அணுகுண்டுகளை வைத்திருக்கும் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளை தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் கூறியதை முன்வைத்து ஒரிசா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானையும், காங்கிரஸ் கட்சியையும் சமமாக தாக்கினார்.

ஒரிசா பொதுக்கூட்டத்தில் பேசும் மோடி
ஒரிசா பொதுக்கூட்டத்தில் பேசும் மோடி

’பாகிஸ்தானின் அணுகுண்டை முன்வைத்து இந்திய மக்கள் மனதில் அச்சத்தை மட்டுமே காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது. ஆனால் பாகிஸ்தானின் அணுகுண்டு தரமானதாக இல்லை என்பது மக்களுக்கு தெரியும்’ என்று மோடி சாடியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பலங்கிரில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். ”பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் காங்கிரஸார் இந்தியர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகிறார்கள். காங்கிரஸின் பலவீனமான மனநிலையால், ஜம்மு காஷ்மீர் மக்கள் பல தசாப்தங்களாக போராடி வருகின்றனர். இந்தியாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததையும், காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுடன் அமர்ந்து பேசியதையும் இந்தியா ஒருபோதும் மறக்காது.

'கவனமாக இருங்கள்... பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது’ என்று சொல்பவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டு மக்களின் மனநிலையைக் கொல்ல முயற்சிக்கின்றனர். காங்கிரசுக்கு எப்போதுமே அந்த எண்ணம் உண்டு. 26/11 தாக்குதலுக்குப் பிறகு, காங்கிரஸும் இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளும், தங்கள் வாக்கு வங்கியை சீர்குலைக்கும் என்ற பயத்தில் தாக்குதல்கள் குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா

அணுகுண்டுகளை கூட கையாள முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் நிலை உள்ளது என்றும் அண்டை தேசத்தை மோடி கிண்டலடித்தார். "அவர்கள் இப்போது அதை வெளியே விற்க பார்க்கிறார்கள். ஆனால் அது தரமானது இல்லை என்பதால், அதன் விற்பனைக்கும் வழியில்லை'' என்றார். கூடவே 1998-ம் ஆண்டு மே 11 அன்று பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாராட்டு தெரிவித்த மோடி, “உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அதில் பெருமை சேர்த்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மரியாதையுடன் பார்க்கப்பட்டனர். ஆனால் காங்கிரஸின் மனநிலை மறுபுறம் நாட்டை பயமுறுத்துவதாக உள்ளது” என்றும் மோடி கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in