உக்ரைன் மீதான புதினின் தாக்குதலை அடுத்து, ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின்போது ’இது போருக்கான நேரம் அல்ல’ என்று அவரது கண்களைப் பார்த்து கூறியதாக மோடி தெரிவித்தார்.
உலகளாவிய பதட்டங்கள் மற்றும் மோதல்களில் மோடி தனது பங்கு குறித்து பேசும்போது இதனை தெரிவித்த மோடி ‘உலகளவில் அமைதியை மட்டுமே விரும்புவதாக’வும் தெரிவித்துள்ளார்.
“பெரும்பாலான நாடுகள் ஒருபக்க சாய்விலான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. நாம் மட்டும்தான் எவர் பக்கமும் சாயாத, அமைதிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். எனவே, ஆயுதம் கொடுப்பதையோ, சண்டையிடுவதையோ பேசாத ஒரே மக்கள் நாம் மட்டுமே என்று உலகம் நம்புகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கண்களைப் பார்த்து, இது போருக்கான நேரம் அல்ல என்று சொல்ல எனக்கு தைரியம் இருந்தது. அதற்கேற்ப இந்தியா தனது நிலையை உலகில் உருவாக்கியுள்ளது" என்று அந்த பேட்டியில் மோடி கூறினார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் பல்வேறு உச்சிமாநாடுகளுக்கு தனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்தார். “பெருமைக்குப் பேசுவது எனக்குப் பிடிக்காது. இந்தியாவில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். எனவே, தேர்தல் நடைபெறுகிறது என்று நான் கூறியபோதும், ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் பல்வேறு உலகளாவிய நிகழ்வுகளுக்காக எனக்கு அழைப்புகள் வந்துள்ளன. ஜி7 உட்பட அனைத்து நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை விரும்புகின்றன” என்றும் மோடி தெரிவித்தார்.
பின்னர் மறக்காது காங்கிரஸ் கட்சியை தாக்கவும் செய்தார். இடஒதுக்கீடு அஸ்திரத்தை பயன்படுத்தி பிராந்திய கட்சிகளிடம் இருந்து முஸ்லிம் வாக்கு வங்கியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் அப்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மத்திய அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய மோடி, “நான் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். எந்தவொரு நபர் அல்லது கட்சி வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஏஜென்சிகளுக்கு நான் தெளிவுபடுத்தினேன்” என்றும் விளக்கினார்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!
'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!
இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்ஷன்!