மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

பிரதமர் மோடி விடுப்பே எடுத்ததில்லை; ராகுல் கோடைகாலத்துக்கு வெளிநாடு சென்றுவிடுவார்... கலாய்த்த அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடி விடுமுறையே எடுத்ததில்லை என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோடைகாலம் வந்தால் வெளிநாடு சென்றுவிடுவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்று பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளன. விடுமுறையே எடுக்காதவர் பிரதமர் நரேந்திர மோடி. கோடைக்காலம் வந்தால் வெளிநாடு செல்பவர் ராகுல் காந்தி. எனவே இருவருக்கும் இடையே போட்டி இல்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு பக்கம் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் களத்தில் இருக்கிறோம்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இன்னொரு பக்கம், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் செய்தவர்களின் இந்தியா கூட்டணி உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாட்டின் 60 சதவீத பகுதிகளுக்கு நான் சென்று வந்துவிட்டேன். எங்கு பார்த்தாலும் 'மோடி, மோடி' என்ற முழக்கமே கேட்கிறது.

பிரதமர் மோடி இந்த முறை அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் ‘400 பிளஸ்' இலக்கை கொடுத்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு 43 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களைக் கொடுத்தனர். 2019ல், 51 சதவீத வாக்குகளுடன், 25 இடங்களைக் கொடுத்தனர். இந்த முறை மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், 60 சதவீத வாக்குகளை உறுதிசெய்து, பாஜக கூட்டணி 28 இடங்களிலும் வெல்ல வேண்டும்.” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in