போலி என்சிபி, சிவசேனாவை காங்கிரஸில் இணைத்து விடுவார்கள்: சரத் பவார், உத்தவ் தாக்கரேவை சீண்டிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

போலி என்சிபி, போலி சிவசேனாவை தேர்தலுக்குப் பின்னர் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸில் இணைத்து விடுவார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், நந்தூர்பாரில் பாஜக சார்பில் இன்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில், "அவர் (சரத் பவார்) மிகவும் அவநம்பிக்கையுடனும், ஏமாற்றத்துடனும் இருக்கிறார். ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் பொருத்தமானவராக இருக்க வேண்டும் என்றால் ஒரு பெரிய கட்சியை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், போலி என்சிபி மற்றும் போலி சிவசேனா ஆகியவை காங்கிரஸுடன் இணைவதற்கு தங்கள் மனதை தயார்படுத்தி வருகின்றன.

காங்கிரஸில் இணைந்து மடிவதற்குப் பதிலாக உங்கள் கனவுகளை மரியாதையுடன் நிறைவேற்ற, பெருமையுடன் நமது அஜித் பவார், ஏக்நாத் ஆகியோருடன் சேருங்கள் என நான் அவர்களுக்கு (சரத் பவார், உத்தவ் தாக்கரே) சொல்வேன்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவார், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த சமீபத்தில் பேட்டியில், “இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பல பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸுடன் நெருக்கமாகும் அல்லது காங்கிரஸுடன் இணைவதுதான் தங்கள் கட்சிக்கு உகந்தது என முடிவு செய்யும்" என கூறியிருந்தார்.

சரத் பவாரின் இந்த பேட்டியைத் தொடர்ந்தே அவரும், உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸில் இணைந்து விடுவார்கள் என விமர்சித்துள்ளார்.

சரத் பவார், உத்தவ் தாக்கரே
சரத் பவார், உத்தவ் தாக்கரே

பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், "ராமர் கோயில் மற்றும் ராம நவமி விழாக்கள் இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

கிருஷ்ணரின் நிறம் கொண்டவர்களை ஆப்பிரிக்கர்கள் என்று காங்கிரஸ் அழைக்கிறது. அதனால் திரவுபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக வருவதை அவர்கள் விரும்பவில்லை. இது ஆதிவாசிகளை அவமதிக்கும் செயல் இல்லையா?” என்று பிரதமர் மோடி பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in