அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும் சொல்லுங்கள் பார்ப்போம்... ஒடிசா முதல்வருக்கு பிரதமர் மோடி சவால்!

பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் (கோப்பு படம்)
பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் (கோப்பு படம்)

ஒடிசா மாநிலத்தின் அனைத்து மாவட்ட பெயர்களையும் குறிப்புகளின்றி சொல்ல முடியுமா? என அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கிற்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒடிசா மாநிலம், கந்தமாலில் பாஜக சார்பில் இன்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, “நவீன் பாபு (நவீன் பட்நாயக்) நீண்ட காலமாக முதலமைச்சராக இருப்பதால் நான் சவால் விட விரும்புகிறேன். ஒடிசாவின் மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களின் பெயர்களை காகித குறிப்பின்றி, சொல்லுமாறு நவீன் பாபுவிடம் கேளுங்கள்.

முதலமைச்சரால் மாநிலத்தின் மாவட்டங்களையே சொல்ல முடியாவிட்டால், அவர் எவ்வாறு உங்கள் துயரங்களை அறிவார்?. 5 ஆண்டுகளில் நான் உங்கள் ஒடிசாவை நம்பர் 1 ஆக மாற்றவில்லை என்றால், 'நீங்கள் எங்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தீர்கள்' என்று என்னிடம் கேட்கலாம்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியுடன் பாஜக இந்தத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்க கூடும் என பேச்சுகள் அடிபட்டன. ஆனால், இருகட்சிகளிடையே சரியான உடன்பாடு ஏற்படாததால், பாஜக தனித்து போட்டியிடுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்

ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இணைந்து தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் மே 13 துவங்கி ஜூன் 1 வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in