வேட்புமனு தாக்கலுக்கே மாஸ் காட்டிய பவன் கல்யாண்... அதிர்ந்தது பிதாபுரம் தொகுதி!

பவன் கல்யாண் வேட்பு மனு தாக்கல் பேரணியில் பங்கேற்ற ஜன சேனா, கூட்டணி கட்சியினர்...
பவன் கல்யாண் வேட்பு மனு தாக்கல் பேரணியில் பங்கேற்ற ஜன சேனா, கூட்டணி கட்சியினர்...

ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ பிரம்மாண்ட பேரணி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் பவன் கல்யாண்
வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் பவன் கல்யாண்

ஆந்திராவில் பாஜக 6 தொகுதிகள், தெலுங்கு தேசம் 17 தொகுதிகள், ஜன சேனா கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 10 தொகுதிகள், தெலுங்கு தேசம் 144 தொகுதிகள், ஜன சேனா கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாளத்துடன் அவர் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பவன் கல்யாண் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பீமவரம், கஜுவகா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் தோல்வியடைந்தார்.

இந்த முறை பிதாபுரம் தொகுதியில் போட்டியிடும் பவன் கல்யாணை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான எஸ்.வி.எஸ்.என். வர்மா ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய மெகா பேரணி ஏற்பாடு அவருடையதுதான் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in