கோவை : வாக்களிக்க செல்ல முடியாமல் தவிக்கும் வாக்காளர்கள்... பேருந்து நிலையம் முன் திடீர் போராட்டம்!

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பயணிகள் சாலை மறியல்
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பயணிகள் சாலை மறியல்

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேத்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. இதே போல் கோவையில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு மையம்
வாக்குப்பதிவு மையம்

இந்த நிலையில் இன்று காலை கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். ஆனால் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு முன்பாக சொந்த ஊர்களுக்கு சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், அவர்கள் தவித்தனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் பயணிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரசுப்பேருந்துகள்
அரசுப்பேருந்துகள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும் போக்குவரத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in