‘இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட ஓபிஎஸ்’... அதிர்ச்சியில் ராமநாதபுரம்; மகிழ்ச்சியில் அதிமுக!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பரமக்குடியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ பெரியோர்களே தாய்மார்களே உங்களுக்கு பொன்னான வாக்குகளை வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “என்ன செய்வது பழக்கதோஷம்” என்றும் கூறினார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், மொத்தம் 5 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு ஓபிஎஸ் ஓட்டுக் கேட்டதை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in