இரட்டை இலை சின்னத்தை முடக்கவேண்டும்... தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் திடீர் மனு!

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியை வழி நடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டது. கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பொதுக்குழுவை கூட்டி இரண்டு பதவிகளும் ஒழிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இபிஎஸ் ஓபிஎஸ் (கோப்பு படம்)
இபிஎஸ் ஓபிஎஸ் (கோப்பு படம்)

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். இருப்பினும் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி இரு தரப்பும் தொடர்ந்து பல்வேறு உரிமையியல் வழக்குகளை தொடந்துள்ளன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதிமுகவில் தனியாக கூட்டணி அமைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 33 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன.

வா. புகழேந்தி
வா. புகழேந்தி

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தத் தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில் மட்டுமே போட்டி என ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து கூறிவந்த நிலையில், பாஜகவின் இந்த திடீர் முடிவு பெரும் அதிர்ச்சியை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஏற்படுத்தி உள்ளது. பரபரப்பான இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் திடீர் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக படுதோல்வியை அடைந்தால், அதனால் தொண்டர்கள் மனதளவில் பெரும் கவலை அடைவார்கள் என்பதால், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை எந்த தரப்புக்கும் ஒதுக்க கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!

பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in