புதிய நாடாளுமன்றம் திறப்பு: மணல் சிற்பம் செய்து அசத்திய சுதர்சன் பட்நாயக்!

சுதர்சன் பட்நாயக்
சுதர்சன் பட்நாயக்புதிய நாடாளுமன்றம் திறப்பு: மணல் சிற்பம் செய்து அசத்திய சுதர்சன் பட்நாயக்!

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து தமிழகத்தை சேர்ந்த செங்கோலை சபாநாயகர் இருக்கை அருகில் வைக்கும் நிகழ்வை பாராட்டு வகையில் பிரபல மணல் சிற்ப ஓவியர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் ரூ.970 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆதீனங்கள் மந்திரங்கள் ஓத பிரதமர் மோடி செங்கோலை வணங்கி அதனை சபாநாயகர் இருக்கை அருகில் வைத்தார்.

இந்தநிலையில், ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் ''எனது நாடாளுமன்றம் எனது பெருமை'' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

‘’புதிய நாடாளுமன்ற கட்டிடம், புதிய இந்தியாவின் சின்னம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தேசத்திற்கான உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்களுக்கு பாராட்டுக்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டதை நினைத்து எங்கள் இதயம் பெருமிதத்தால் நிறைந்துள்ளது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in