20 ஆதீனங்களில் கால்களில் விழுந்து ஆசி பெற்ற மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்!

வருகை தரும் பிரதமர் மோடி
வருகை தரும் பிரதமர் மோடி20 ஆதீனங்களில் கால்களில் விழுந்து ஆசி பெற்ற மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்!

டெல்லியில் ரூ.970 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020-ம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இன்று அதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் ஹோம பூஜைகள் நடைபெற்றன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பல்வேறு தோற்றம்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பல்வேறு தோற்றம்.20 ஆதீனங்களில் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்!

அதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் சிங்மங்களூரு சிருங்கேரி மடம் சார்பில் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க 40 ஆதீனங்கள் டெல்லிக்கு சென்று இருக்கும் நிலையில் அவர்கள் மந்திரங்களை ஓதினர். பூஜை முடிந்த பிறகு 20 ஆதீனங்கள் கால்களில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதையடுத்து, ஆதீனங்களிடம் இருந்து செங்கோலைப் பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்.

ஆதீனங்களிடம் ஆசி பெற்ற மோடி
ஆதீனங்களிடம் ஆசி பெற்ற மோடி20 ஆதீனங்களில் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்!

ஒரு மணி நேரம் இந்து மத வழக்கப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று சம்பிரதாயப்படி நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி மக்களவை சென்று செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். இந்த செங்கோல் மதுரை ஆதீனத்தால் பிரதமர் மோடியிடம் நேற்று வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருஞான சம்பந்தரின் கோளறு பதிகம் உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன. செங்கோல் நிறுவப்பட்ட பிறகு இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன.

முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் நாடாளுமன்ற தொடக்க நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்க இருக்கிறது. இதில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண சிங் உரையாற்றுகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீன் தன்கரின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இந்த விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in