சோதனையில் இவங்களும் சிக்குறாங்க... பிடிபட்ட 19 டன் தேக்கு மரத்துக்கு ரூ.1 லட்சம் ஜிஎஸ்டி அபராதம் விதிப்பு!

ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் எடுத்து செல்லப்பட்ட தேக்கு மரங்கள் பறிமுதல்
ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் எடுத்து செல்லப்பட்ட தேக்கு மரங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் 19 டன் தேக்கு மரங்களை ஏற்றிச் சென்ற லாரியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பிடிபட்ட மரங்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி அபராத வரி விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 49,000 ரூபாய்க்கு மேல் ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்வோரிடம் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித் துறையில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை அருகே நண்டலார் சோதனைச் சாவடி
மயிலாடுதுறை அருகே நண்டலார் சோதனைச் சாவடி

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினரும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வரி ஏய்ப்பு செய்யும் பலரும் இந்தச் சோதனைகளின் போது எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்வதால் அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு
தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு

அதன்படி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் நண்டலார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரா டிம்பர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று காரைக்கால் வழியாக தரங்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தது.

அதனை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரியில் உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் 3,31,338 ரூபாய் மதிப்பிலான 19 டன் தேக்கு மரம் ஏற்றிச்செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த லாரியை தேக்கு மரங்களுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மதுரா டிம்பர்ஸ் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராதமாக 1,01,086 ரூபாய் வரி விதிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in