‘விஜய்க்கு நடந்திருந்தா கொதிச்சிருப்பாங்க...’ தனது வாக்கை வேறொருவர் செலுத்தியதால் ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்மணி!

வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய லட்சுமி
வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய லட்சுமி

தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதால், வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து ஏமாற்றத்துடன் பெண்மணி ஒருவர் வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் அவரது வாக்கை நடிகர் யோகிபாபு கள்ள வாக்காக பதிவு செய்வது கதையின் முக்கிய அம்சமாக இருந்தது. யாரேனும் கள்ள ஓட்டு பதிவு செய்துவிட்டால், அதற்கு பதிலாக மாற்று வாக்கு வழங்கும் 49 பி என்ற சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் அது தொடர்பான போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருப்பதில்லை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் 65 வயதுடைய பெண்மணி ஒருவரின் ஓட்டை மற்றொருவர் மாற்றி போட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் கேட்ட போது மறுத்துவிட்டதாக தகவல்
மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் கேட்ட போது மறுத்துவிட்டதாக தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 312 வது எண்ணிட்ட வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்டிஆர் நகர் பகுதியில் சேர்ந்த 65 வயதான லட்சுமி இன்று வாக்கு செலுத்துவதற்காக சென்றிருந்தார். ஆனால் அவருடைய ஓட்டை வேறொருவர் போட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வாக்களிக்க தாமதமானதால் காத்திருந்த வாக்காளர்கள் வாக்குவாதம்
வாக்களிக்க தாமதமானதால் காத்திருந்த வாக்காளர்கள் வாக்குவாதம்

இதையடுத்து தனக்கு மாற்று ஏற்பாடு செய்து தர முடியுமா என அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பிய போது, அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டதால், வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மற்றவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள், லட்சுமியின் வீட்டு முகவரியை மட்டும் எழுதி வைத்துக்கொண்டு அவரை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் வாக்களிக்க முடியாத சோகத்தில் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in