ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார பாடலுக்கு தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலில் வரும் காட்சி
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலில் வரும் காட்சி

ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறும் தகவல் தவறானது என டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ திலீப் பாண்டே எழுதி பாடிய இரண்டு நிமிட பிரச்சார பாடல் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பிரச்சார பாடலை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார பாடலுக்கு தடை என்பது தவறான தகவல்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விளம்பர வழிகாட்டுதல்களை மீறியதால் பாடலின் உள்ளடக்கங்களை மாற்றியமைக்குமாறு அக்கட்சியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால் இதுகுறித்து மாநில ஊடக சான்று அங்கீகாரம் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அக்கட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பிரச்சார பாடலில் இடம்பெற்ற தகவல்கள் தொடர்பாக 8 ஆட்சேபணைகளை ஆம் ஆத்மி கட்சியிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி கூறுகையில், "பிரச்சாரப் பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை.

டெல்லி தேர்தல் ஆணையம்
டெல்லி தேர்தல் ஆணையம்

அந்த வீடியோவில் உண்மை சம்பவங்களே உள்ளன. அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியாவிடம் போலீஸார் தவறாக நடந்து கொண்டது, போராட்டங்களில் எங்கள் தன்னார்வலர்கள் மிருகத்தனமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தது எல்லாமே உண்மை சம்பவம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in