ஏப்ரல் 19ல் திரையரங்குகள் இயங்காது... உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

திரையரங்குகள்
திரையரங்குகள்

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 19-ம் தேதியன்று தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழகம் உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழகத்தின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் அன்றைய தினம் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள்,  பள்ளிகள் கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள்  என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஆனாலும் மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் பூத்துகள் உள்ளிட்டவை இயங்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் நேராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...   

சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!

தாய் கண் முன் மகன் வெட்டிக் கொலை... திருவேற்காட்டில் பயங்கரம்!

தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!

உங்க அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள்... ரசிகரின் கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!

ராகுல் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... நடிகை ரம்யா ரோடு ஷோ: குமாரசாமிக்கு எதிராக களமாடும் காங்கிரஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in