தெலங்கானா தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸுக்கே ஆதரவு... ஷர்மிளா அதிரடி முடிவு!

தெலங்கானா தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸுக்கே ஆதரவு... ஷர்மிளா அதிரடி முடிவு!

தெலங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா, முதல்வர் கே சந்திரசேகர் ராவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த தேர்தலில் வாக்குகள் பிளவுபடாமல் இருக்க காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒய். எஸ். ஷர்மிளா
ஒய். எஸ். ஷர்மிளா

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான ஷர்மிளா 2021-ல் ஓய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை தொடங்கினார். அவர் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து, தனது கட்சியை காங்கிரஸோடு இணைக்கும் முயற்சியில் இறங்கினார். சில காங்கிரஸ் தலைவர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருந்த நிலையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி போன்றவர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் ஷர்மிளாவோடு இணைந்து பணியாற்றுவதை வரவேற்கிறேன் என்று கூறினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த உறுப்பினர்களுடன் பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், ஷர்மிளாவால் காங்கிரஸில் இணைய முடியவில்லை.

தெலங்கானா காங்கிரஸ்
தெலங்கானா காங்கிரஸ்

இதனால் அக்டோபர் 12ம் தேதி, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஷர்மிளாவின் கட்சி அறிவித்தது. பாளையார் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஷர்மிளா அறிவித்தார். அவரது தாயார் விஜயம்மாவும் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஷர்மிளா தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.டி.பி-யின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பயனளிக்கும், ஏனெனில் அது ஆளும் பாரத் ராஷ்டிர சமிதிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in