தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

மழை
மழை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (நவ. 3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்," வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவ. 4) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in