முதல்கட்டத் தேர்தல்.... கவனம் ஈர்க்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நட்சத்திர வேட்பாளர்கள்
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நட்சத்திர வேட்பாளர்கள்

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்பி-யான கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளும் இதில் அடங்கும்.

இந்தத் தேர்தலில் நாட்டின் மிக நீண்ட காலம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பணியாற்றிய நிதின் கட்கரி, மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இத்தொகுதியில் அவர் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக முன்னாள் தேசியத் தலைவரான கட்கரி, இத்தேர்தலில் காங்கிரஸின் விகாஸ் தாக்கரேயை எதிர்கொள்கிறார். விகாஸ் தாக்ரே முன்னாள் நாக்பூர் மேயர் மற்றும் நாக்பூர் மேற்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல் மேற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக உள்ளார். இவரும் 2014 , 2019 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

முன்னாள் சட்ட அமைச்சராக இருந்த இவர், தற்போது புவி அறிவியல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறைகளை நிர்வகித்து வருகிறார். அருணாச்சல் மேற்கு தொகுதியில் இவரை எதிர்த்து முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான நபம் டுகி களத்தில் உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முக்கிய பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தன் மூலம் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் ஐஐஎம்-லக்னோவில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு எதிராக திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமார் முக்கிய போட்டியாளராக திகழ்கிறார். முன்னாள் மேயரான ராஜ்குமார் முன்பு அதிமுகவில் இருந்தவர்.

காங்கிரஸின் முக்கிய இளம் முகங்களில் ஒருவரான கவுரவ் கோகோய் அசாமின் கலியாபோர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2014, 2019 தேர்தல்களில் பாஜக அலை இருந்தபோதிலும் இவர் வெற்றி பெற்றார். இந்த முறை தொகுதி சீரமைப்புக்குப் பின், கலியாபோர் தொகுதி இல்லாததால் அவர் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கவுரவ் கோகோய்
கவுரவ் கோகோய்

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஜோர்ஹாட், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக வசமானது. கவுரவ் கோகோயின் தந்தையும், அசாம் முன்னாள் முதல்வருமான மறைந்த தருண் கோகோய், இரண்டு முறை ஜோர்ஹாட்டில் வெற்றி பெற்றவர். ஜோர்ஹாட்டில் பாஜக தனது தற்போதைய எம்பி-யான டோபோன் குமார் கோகாயை களமிறக்கியுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்துடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார். தமிழ்நாட்டில் பாஜக ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்க, மக்களிடம் நன்கு அறிமுகமான இவரை மீண்டும் தேர்தல் களத்துக்கு அக்கட்சி கொண்டுவந்துள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பு மருத்துவர் தமிழிசை சென்னை மருத்துவக் கல்லூரியில் கற்பித்தல் பணியில் இருந்தவர். தென் சென்னை தொகுதியில் இவர், தற்போதைய எம்பி-யான திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளார்.

இரண்டு முறை மாநிலங்களவை எம்பி-யாக இருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, கடந்த 2019ம் ஆண்டில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான குரல்களில் ஒன்றான இவர், தேசிய தலைநகரில் திமுக-வின் முக்கிய முகமாகவும் உள்ளார். தனது முதல் மக்களவைத் தேர்தலில், கனிமொழி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக எம்பி- கனிமொழி
திமுக எம்பி- கனிமொழி

அந்தத் தேர்தலில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் 2-வது இடத்தைப் பிடித்தார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் தங்கை கனிமொழிக்கு எதிராக அதிமுக. சார்பில் சிவசாமி வேலுமணியும், பாஜக அணியில் தமாகா வேட்பாளரான எஸ்.டி.ஆர். விஜயசீலனும் போட்டியிடுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in