பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் - அசாம் முதல்வர் அதிரடி!

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் பிரமாண்ட கோயிலைக் கட்டவும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பீகாரின் பெகுசராய் நகரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங்கிற்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியின் பிரமாண்ட கோயில் கட்டுவதற்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக இணைப்பதை உறுதி செய்வதற்கும், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

மோடி
மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் கலந்து கொள்ளவில்லை. ராகுலும், லாலுவும் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். அவர்கள் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சினைகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர், இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்றும், அணுகுண்டு வைத்திருப்பதால் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். அணுகுண்டு, அதன் காலாவதி தேதியை கடந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது, அதை எந்த சக்தியும் பறிக்க முடியாது என்பதை எங்கள் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனை உறுதிசெய்ய மோடி ஜிக்கு மூன்றாவது முறையாக நாம் ஆட்சியை வழங்க வேண்டும்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா

கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் ஓபிசி/எஸ்டி மற்றும் எஸ்சி இட ஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய காங்கிரஸ், இப்போது இதை நாடு முழுவதும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது. எனவே ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டைக் காப்பாற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்

பீகாரில் பெகுசராய், தர்பங்கா, உஜியார்பூர், சமஸ்திபூர், பெகுசராய், முங்கர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in