பிரதமர் மோடியுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பு... அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று கங்கை நதிக் கரையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய அவர், பின்னர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வாராணசி தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்குகிறார்.

ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் பங்கேற்று இருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியில் இருந்து இன்று பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார். இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்
கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in