தேர்தல் ஆணைய உத்தரவை மதிக்கல... நாகையில் தூய்மைப்பணியாளர்களுக்கு விடுப்பில்லை!

வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்
வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவு நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்
வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்

இது தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால், நாகை நகராட்சியில் இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காமல் அவர்களை நகராட்சி நிர்வாகம் வேலை வாங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்
வாக்குப்பதிவு நாளன்றும் வேலையில் ஈடுபட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள்

இது தூய்மை பணியாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறி நடந்து வரும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூய்மைப்பணியாளர்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகையில் மட்டுமல்ல... சென்னை மாநகராட்சி பகுதிகளிலேயே இன்று தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல பணியில் இருக்கிறார்கள். இதைச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள், “ தூய்மைப் பணி, மருத்துவம், பால் விநியோகம், போக்குவரத்து உள்ளிட்டவை அத்தியாவசியப் பணிகள் என்பதால் அது தொடர்பான பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து அந்தப் பணிகளை தேக்க முடியாது. எனினும் இது குறித்து வருங்காலங்களில் தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in