எனது தாயின் தாலி நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது: பிரியங்கா காந்தி உருக்கம்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
Updated on
1 min read

எனது தாயின் தாலி நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி பேசும் போது, "கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் மங்கள சூத்திரத்தையும் (தாலி), தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது.

55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'மங்கள சூத்திரம்' என்ற உங்கள் தங்கத்தை யாராவது பறித்தார்களா? போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்கு வழங்கினார். என் தாயின் மங்களசூத்திரம் இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது” என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21ம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் சொத்துகளும் கணக்கெடுக்கப்படும். தாய்மார்கள், சகோதரிகளுக்கு சொந்தமான தங்கத்தை கணக்கிட்டு பின்னர் அதை மறுவிநியோகம் செய்யும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்கள் மங்கள சூத்திரத்தை கூட விடமாட்டார்கள்" என்றார்.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

பிரதமரின் இந்த பேச்சு தவறானது என்றும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள் என்ற விமர்சனத்துக்கு பதிலடியாக பிரியங்கா காந்தி, தனது தாயின் தாலி இந்த நாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in