'சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்'... சிறையிலிருந்து வெளியில் வந்து முழங்கிய கேஜ்ரிவால்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும், இதுவே எனது கோரிக்கை. சர்வாதிகாரத்திலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார்.

டெல்லி திகார் சிறையில் 50 நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மாலை 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்தார். திகார் சிறையின் கேட் எண் 4-ல் இருந்து கேஜ்ரிவால் வெளியே வந்தபோது, அவரை வரவேற்க ஆம் ஆத்மி தொண்டர்கள் சிறைக்கு வெளியே திரண்டு இருந்தனர். மேலும், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் போன்றோரும் வரவேற்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அங்கே கேஜ்ரிவாலுக்காக காத்திருந்தார்.

சிறைக்கு வெளியே நின்றவர்களை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்த கேஜ்ரிவால், பின்னர் அங்கே உரையாற்றினார். அப்போது, "உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்... நீங்கள் எனக்கு ஆசி வழங்கினீர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும், அவர்களால் தான் உங்கள் முன் நிற்கிறேன், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

எனக்கு எப்போதும் அனுமனின் ஆசி உள்ளது. எனவே நாளை காலை டெல்லியின் கனாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் நான் வழிபாடு செய்ய உள்ளேன். நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும். இதுவே எனது கோரிக்கை.. சர்வாதிகாரத்திலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்" என்று அவர் கூறினார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலை, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை, கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது.

இதற்கிடையே அர்விந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும், அவரது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று தற்காலிக ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கேஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வரை தற்காலிக ஜாமீன் வழங்கியது. மேலும் வரும் ஜூன் 2ம் தேதி கேஜ்ரிவால் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in