அடுத்த பிரதமர் மோடி கிடையாது; அமித் ஷா தான்... கேஜ்ரிவால் பொளேர்!

அர்விந்த் கேஜ்ரிவால் - அகிலேஷ் யாதவ்
அர்விந்த் கேஜ்ரிவால் - அகிலேஷ் யாதவ்

அடுத்த பிரதமராக அமித் ஷாவை பதவியில் அமர்த்துவதற்கான பாதையை பிரதமர் நரேந்திர மோடி வகுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் பெற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அர்விந்த் கேஜ்ரிவால் - அகிலேஷ் யாதவ்
அர்விந்த் கேஜ்ரிவால் - அகிலேஷ் யாதவ்

அப்போது பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி 2025ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 75 வயதை எட்டுவார். அன்றைய தினம் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தனது வாரிசாக, அடுத்த பிரதமராக நியமிப்பார். பிரதமர் நரேந்திர மோடி, 75 வயதுக்குப் பிறகு ஓய்வு பெறப் போவதில்லை என இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே அவர் இந்த புதிய விதியை வகுத்துள்ளார். அவர் இந்த விதியை கட்டாயம் பின்பற்றுவார் என உறுதியாக நம்புகிறேன் ”என்றார்.

மேலும் ”பாஜகவால் 220 இடங்களுக்கு மேல் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஹரியாணா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் அவர்களுக்கு கணிசமான தோல்வி ஏற்பட உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை. இந்தியா கூட்டணி தான் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது” என்றார்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

தொடர்ந்து பேசிய அவர், ”நான் 4 விஷயங்களை பேசுவதற்காக இன்று லக்னோவிற்கு வருகை தந்துள்ளேன். முதலாவது அமித் ஷாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குகள் சேகரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது பாஜக ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2-3 மாதங்களில் ஆட்சியில் இருந்து விலக்கப்படுவார். மூன்றாவது, பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பையும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் நீக்கி விடுவார்கள். நான்காவது ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர உள்ளது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in