‘உங்க படம் இங்கே ஓடாது...’ அகிலேஷ் - ராகுல் கூட்டணியை சீண்டும் மோடி

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி
அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி ஆகியோரை ’இளவரசர்கள்’ என வர்ணித்த பிரதமர் மோடி, ”இருவரும் நடித்த படத்தை உ.பி மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர். இனியும் அவர்கள் படம் இங்கே ஓடாது” என்று இன்றைய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாடியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இடையேயான கூட்டணியை குறிப்பிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு பகடித் தாக்குதல் நடைத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அகிலேஷ் - ராகுல் ஆகியோரை இளவரசர்கள் எனவும் கிண்டல் செய்தார். வழக்கமாக ராகுலை இளவரசர் என சீண்டும் மோடி, இம்முறை அதில் அகிலேஷையும் சேர்த்திருக்கிறார்.

ராகுல் காந்தி -அகிலேஷ் யாதவ் கூட்டு பேட்டி
ராகுல் காந்தி -அகிலேஷ் யாதவ் கூட்டு பேட்டி

"உத்தரபிரதேசத்தில் மீண்டும் இரு இளவரசர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது ஏற்கனவே இங்கே நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனபோதும், இவர்கள் மீண்டும் உ.பி. மக்களிடம் சொந்த பந்தம், ஊழல் மற்றும் சமாதானம் என்று ஒரு கூடை அளவுக்கு சுமந்து கொண்டு ஓட்டு கேட்க வந்துவிடுகின்றனர்" என்று பிரதமர் மோடி சாடினார்.

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டபோது, ​​சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரான் பிரதிஷ்டைக்கான அழைப்பை நிராகரித்தன. இவர்கள் ராமர் கோவில் மற்றும் சனாதன நம்பிக்கையை பழிக்கின்றனர். இன்று நாடு முழுவதும் ராம பக்தி நிரம்பி வழியும் போது, ​​சமாஜ்வாதி கட்சியினர், ராம பக்தர்களை பாசாங்குக்காரர்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றனர்” என்றும், உத்தரபிரதேசத்தின் சென்டிமென்டான ராமர் கோயிலை முன்வைத்தும் பிரதமர் மோடி தாக்கினார்.

சில தினங்களுக்கு முன்னர் உபியில் அகிலேஷ் - ராகுல் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தபோது, பாஜகவின் பிரம்மாண்ட வெற்றி எதிர்பார்ப்பை சீண்டினார்கள். ”2 வாரங்களுக்கு முன்னர் பாஜக 180 இடங்களை எட்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அது 150 இடங்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிகிறது” என்று ராகுல் காந்தி கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலடியாகவே, இன்றைய தினம் அங்கே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி, அகிலேஷ் - ராகுல் ஆகியோரை பதிலுக்கு சீண்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில்  பிரதமர் மோடி
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் பிரதமர் மோடி

உ.பி-யில் கூட்டணி அடிப்படையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 63 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றன. முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனபோதும் பாஜக அமோக வெற்றிபெற்றது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இதையே இன்றைய தனது பேச்சில் தொட்டுக்காட்டிய மோடி, ‘அகிலேஷ் - ராகுல் ஆகியோரின் படத்தை ஏற்கனவே உ.பி மக்கள் நிராகரித்துள்ளனர்’ என பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in