காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமருக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள்... மீண்டும் ராமபாணம் ஏவும் மோடி

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமருக்கு மேலானவர்களாக கருதுகின்றனர் என மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராமபாணம் வீசியிருக்கிறார் பிரதமர் மோடி.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்ற அயோத்தி ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொள்ள மறுத்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் கடுமையாக சாடினார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

”காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமருக்கு மேலாகக் கருதுகின்றனர், ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டைக்கு அழைப்பை மறுத்துள்ளனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமருக்கு நேர்ந்த அவமரியாதை இல்லையா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மோடி, ”தலித்துகள், ஏழைகள் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோரின் உரிமைகளை, காங்கிரஸார் தங்களது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பறிக்கவும் தயங்க மாட்டார்கள்” என்றும் காங்கிரஸ் தலைவர்களை சாடியுள்ளார்.

தொடர்ந்து, ​​'பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றும்' என்ற காங்கிரஸ் பிரச்சாரத்தையும் மோடி பதம் பார்த்தார். “தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய பல்லவியை திரும்பத் திரும்ப பாடுகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும், அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வரும்; இடஒதுக்கீட்டை ஒழிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்?

பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது" என்று மோடி திடமாக கூறினார். மேலும், “மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் என்னுடைய கவசமாக நீடிக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசி மகளிரின் கைத்தட்டலையும் மோடி வாங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in