‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதியோடு முடிந்து போவது; மோடியின் கியாரண்டி நடைமுறைக்கானது’

பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்; மோடி மற்று ராகுல்
பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்; மோடி மற்று ராகுல்

இறுதிச்சுற்று பிரச்சாரம் சூடுபிடித்திருப்பதன் மத்தியில் காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிட்டு பிரதமர் மோடி புது விளக்கம் தந்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெகுவாய் ஒப்பிடப்பட்டு விவாதத்துக்கு ஆளாகி வருகின்றன. பாஜகவை முந்திக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானபோது, அதனை பாஜக கடுமையாக விமர்சித்தது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

’காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய தேர்தலுக்கானது போலத் தெரியவில்லை; பாகிஸ்தானுக்கான தேர்தல் அறிக்கையாக தென்படுகிறது என்றும், சுதந்திரத்துக்கு முந்தையம் முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கையை நினைவூட்டுகிறது என்றும்’ விமர்சனத்து ஆளானது. எலைட் பிரிவினருக்கு அப்பாலான, சாமானியர்கள் மற்றும் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அறிக்கை முக்கியத்துவம் தந்திருந்தது.

இதனையடுத்து பாஜக தேர்தல் அறிக்கை வந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிடுகையில் ஏமாற்றம் அளிப்பதாக குற்றச்சாட்டுக்கு எழுந்தது. வேலைவாய்ப்பு மற்றும் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டி, 2047ல் இந்தியா வளர்ந்த தேசம் என 5 ஆண்டுகளுக்கு அப்பாலான வாக்குறுதிகள் பலதும் அதில் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2 ஆட்சிக்காலங்களில் பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், அவை தொடர்பான அழுத்தமான வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கை

இதனிடையே, காங்கிரஸ் - பாஜ கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “2 நாட்களுக்கு முன்பு, பாஜக தனது 'சங்கல்ப் பத்ரா'வை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடியின் 'உத்தரவாத பத்திரம்' புதுப்பிக்கப்பட்டுள்ளது. 3 கோடி வீடுகள் கட்டப்படும். ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் கிடைக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும், பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும். இவை அனைத்தும் மோடியின் உத்தரவாதங்கள்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

’காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதியோடு முடிந்து போவது; மோடியின் கியாரண்டி நடைமுறைக்கானது’ என்ற மோடியின் கருத்தை எதிரொலிக்கும் வகையில், பாஜகவினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்றும், அவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நம்பிக்கை இல்லாதவர்களின் மிகையான வாக்குறுதிகள் எனவும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in