கோவையில் ஏப்.12-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்... மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம்!

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

கோவை செட்டிப்பாளையத்தில் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கும் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இணைந்து பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் சேர்த்து ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பியுடன் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி அவர்களுடன் இணைந்து ஏப்ரல் 12-ம் தேதியன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் எல் அன்ட் டி பைபாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in