பேசினது போதும் மைக்கை கொடு... மேடையிலேயே மோதிக் கொண்ட அமைச்சர்கள் பொன்முடி - மஸ்தான்!

மேடையில் மோதிக்கொண்ட பொன்முடி - செஞ்சி மஸ்தான்
மேடையில் மோதிக்கொண்ட பொன்முடி - செஞ்சி மஸ்தான்

விழுப்புரத்தில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடியும், செஞ்சி மஸ்தானும் மேடையில் மோதிக் கொண்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேடையில் பேசிய பொன்முடி
மேடையில் பேசிய பொன்முடி

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வந்திருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே பேசத் தொடங்கினார்.

மஸ்தான் பேசிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சிக்கு வந்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது அமைச்சர் வருகிறார். பேச்சை நிறுத்துமாறு கட்சி நிர்வாகி கூறினார். அதை பொருட்படுத்தாத செஞ்சி மஸ்தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மேடைக்கு வந்த பொன்முடி, பேசியது போதும் மைக்கை கொடுக்கும்படி கேட்டார். அதற்கு, நான் இன்னும் பேசி முடிக்கவில்லை என்று கூறினார் செஞ்சி மஸ்தான். இதனால் கோபமடைந்த பொன்முடி, செஞ்சி மஸ்தானிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். மேலும், அவரை கண்டபடி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

மேலும், நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த பொன்முடி, மீண்டும் ஒருமுறை கோபமாக திட்டிவிட்டு சென்றார். இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சமீபகாலமாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கும்போது, விழுப்புரம் பகுதியில் நடக்கும் எந்த திமுக நிகழ்ச்சியிலும் செஞ்சி மஸ்தான் பங்கேற்க கூடாது என மறைமுக உத்தரவு போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், செஞ்சி மஸ்தானுக்கு இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால், செஞ்சி மஸ்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொன்முடி, பொது நிகழ்சியிலேயே செஞ்சி மஸ்தானை திட்டியது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த மனவருத்தத்தில் செஞ்சி மஸ்தான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in