பதில் சொல்லுங்கள் மோடி... பிரதமரை கேள்விகளால் திணறடித்த உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

"கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு, மக்கள் சேமித்து வைத்திருந்த ரூ.500, ரூ.1000யை பறித்தது ஏன்" என்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக என தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்தத் தேர்தலில் அதிமுகவை விட பாஜகவை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. முக்கியமாக, தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த துரோகங்களை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது திமுக.

சென்னையில் மழை பெய்தபோது...
சென்னையில் மழை பெய்தபோது...

இந்நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், 'மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல் என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வரமுடியாதது ஏன்?

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?. இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்? கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொல்லி, கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த ரூ.500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?

ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை சிஏஜிஅறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?. அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடம்

அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?

வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சம்ஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு? நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? பதில் சொல்லுங்கள் மோடி' என்று கேள்விகளை அடுக்கி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in