வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்... அரசு ஊழியர்களுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை!

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் எனவும், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ்
அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ்

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருந்தனர். இதன்படி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு நிர்வாகிகளான தியாகராஜன், வெங்கடேசன், தாஸ் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் (கோப்பு படம்)
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் (கோப்பு படம்)

இதனிடைய அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதிநிலை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும். வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு ஊழியர் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் மாநில அரசு உணர்ந்துள்ளது. அரசின் வருவாயை பெருக்கி, நிதி நிலையை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in