சிதைந்து கிடக்கும் அதிமுகவால் வெற்றிபெறவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் மெய்யநாதன்!

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

அதிமுக சிதைந்து கிடப்பதால் டெல்டாவில் அவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பே கிடையாது என மயிலாடுதுறையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம்

அதனை அடுத்து விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், ”அதிமுக கட்சி சிதைந்து கிடக்கிறது. இதனால் டெல்டாவில் வெற்றி பெற அதிமுகவில் எடப்பாடி தலைமையில் உள்ள அணிக்கு எந்த அமைப்புமே கிடையாது. நகரத்தில் இதுவரை இல்லாத அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சாதனையை நிகழ்த்த வேண்டும்” என்றார்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

மேலும், “மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்திற்கு கூடுதலாக நீதி பெற்று வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் நகராட்சிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து தருவோம். தமிழ்நாடு அரசின் திட்டங்களை கடைக்கோடி வாக்காளர்கள் வரை எடுத்து சென்று, இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என அவர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in