திமுக தொண்டர்கள் அதிர்ச்சி... அப்போலோவில் அமைச்சர் அனுமதி!

திமுக தொண்டர்கள் அதிர்ச்சி... அப்போலோவில் அமைச்சர் அனுமதி!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அமைச்சர் ராமச்சந்திரன்
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால்  அரசியல் கட்சிகளின்   தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் மும்முரமாக  உள்ளனர்.  தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு  அமைச்சருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதை அவர்கள் தீவிரமாக கண்காணித்து மாவட்டச் செயலாளருடன் இணைந்து வேட்பாளருக்காக வேலை செய்து வருகின்றனர். இரவு பகலாக அமைச்சர்கள் பணியாற்றி வரும் நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னையில் இருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாக அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in