தேர்தலை புறக்கணியுங்கள்... மாவோயிஸ்ட்கள் மிரட்டுவதால் வயநாட்டில் பதற்றம்!

வயநாடு தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் தேர்தலை புறக்கணிக்கக் கூறி மிரட்டல்
வயநாடு தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் தேர்தலை புறக்கணிக்கக் கூறி மிரட்டல்

வயநாடு தொகுதியில் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கிராமம் கிராமமாக சென்று மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்து வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்கள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க களமிறங்கிய தண்டர்போல்ட் படையினர்
மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க களமிறங்கிய தண்டர்போல்ட் படையினர்

அப்போது கிராம மக்கள் சிலர் மாவோயிஸ்ட்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிப்பதால் தங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என பொதுமக்கள் மாவோயிஸ்ட்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்கள் மக்கிமாலா தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் மறைந்தனர்.

ராகுல்காந்தி - ஆனி ராஜா
ராகுல்காந்தி - ஆனி ராஜா

இது தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ பகிரப்பட்ட நிலையில், தற்போது அந்த பகுதியில் தண்டர்போல்ட் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோவில் இருந்த காட்சிகளைக் கொண்டு மிரட்டல் விடுத்த மாவோயிஸ்ட்கள் யார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மொய்தீன், சந்தோஷ் ,சோமன் மற்றும் ஆஷிக் என்பது தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்ட்கள் பகிரங்க மிரட்டல் விடுத்ததன் காரணமாக வயநாடு தொகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பாஜக சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in