‘நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமையா?’ மன்மோகன் சிங் பழைய பேச்சும், பாஜக புதிய சர்ச்சையும்

பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என்று காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாக, பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடியின் அண்மை பேச்சு சர்ச்சையானதன் மத்தியில், அதற்கு மன்மோகன் சிங் பேச்சு மேற்கோள்காட்டப்படுகிறது. இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது என்ன என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலி உள்ளிட்ட நகைகளை கணக்கெடுத்து ஊடுருவல்காரர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும்’ என்று குற்றம்சாட்டினார். இதன் பினணியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் கொள்கை அறிவிப்பு ஒன்றையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி
ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

அந்த மேற்கோள் இதுதான் என, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கின் பேச்சை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். அதில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார்.

அதில், “பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடி இனத்தோருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினத்தோரில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் இந்த வளர்ச்சியின் பலாபலன்களை பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது தான்" என்று மன்மோகன் சிங் பேசியுள்ளார். அவரது பேச்சு அப்போதே பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்தார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

தற்போது சுமார் 18 வருடங்கள் கழித்து மீண்டும் மன்மோகன் சிங் பேச்சை முன்வைத்து பாஜகவினர் சர்ச்சை கிளப்பி வருகின்றனர். சமூகத்தில் பின் தங்கியவர்கள், நலிந்தவர்களுக்கு முன்னுரிமை தருவது குறித்து எல்லா ஆட்சிக் காலத்திலும் ஆட்சியாளர்கள் உறுதிமொழி கொடுப்பதுண்டு. அந்த வகையிலான பழைய பேச்சு தற்போது புதிய சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in