அண்ணாமலையின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது... மாணிக்கம் தாகூர் கிண்டல்!

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் HR Ferncrystal

"இந்தியா கூட்டணி வென்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும். அப்போது அண்ணாமலை எதை விடுவார் என்று பார்ப்போம்" என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் மாணிக்கம் தாகூர் தனது மனைவியுடன் திருநகர் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இந்த மக்களவைத் தேர்தல் விலைவாசியை மையப்படுத்தியும், எதிர்காலத்தை மையப்படுத்தியதுமான தேர்தல். இதில், மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.

மனைவியுடன் வாக்களித்தார் மாணிக்கம் தாகூர்
மனைவியுடன் வாக்களித்தார் மாணிக்கம் தாகூர் HR Ferncrystal

உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். அவருடையை காமெடிக்கு ஒரு அளவே கிடையாது. உயிர் போறது, உயிர் போகாதது எல்லாம் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால் தானே தெரியும். அவருக்கு வாக்களித்து கோவை மக்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அரவக்குறிச்சி மக்கள் எடுத்த முடிவைத்தான் கோவை மக்களும் எடுப்பார்கள். அவர் நாடாளுமன்றத்திற்கு செல்ல மக்கள் வாய்ப்பு அளிக்கமாட்டார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆட்சி அமையும். அப்போது, ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிப்பார். அது மிக விரைவில் நடக்கும். அப்போது பார்க்கலாம் அண்ணாமலை எதை விடுகிறார் என்று.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நீட் தேர்விற்கு சில மாநிலங்கள் வேண்டும் என்கிறது. சில மாநிலங்கள் வேண்டாம் என்கிறது. மாநிலங்கள் முடிவே மத்திய அரசு ஏற்கும் அதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றால் காங்கிரஸ் அதை உடனடியாக நீட் விலக்கு அளிக்கும். காங்கிரஸ் கட்சி யார் மேலும் எந்த முடிவையும் திணிக்க மாட்டோம். அண்ணாமலையின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அண்ணாமலை உயிரை விடுவோம் என்று கூறியது போன்று காங்கிரஸ் கட்சி யார் மீதும் எதையும் திணிக்காது. இப்படிப்பட்ட திணிப்பு என்பதையே காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

ராகுல் காந்தியை பொறுத்தவரை இது போன்ற திணிப்பு இருக்காது. நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யலாம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறியிருக்கிறார். ஆனால், மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in